ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ஸ்ரீ வானாசல மஹாமுனயே நம:
திருநக்ஷத்ரம் : ஐப்பசி பூசம்(புஷ்யம்)
ஆசார்யன் : மணவாள மாமுனிகள்
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீபெரும்பூதூர்
எம்பெருமானார் அவதரித்த ஸ்ரீபெரும்பூதூரில் யதிராஜ மடம் ஆதி (முதல்) யதிராஜ ஜீயரால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்பூதூர் யதிராஜ ஜீயர் மடம்
ஆழ்வார் ஆசார்யர்கள் அவதார ஸ்தலங்களில் கோயில் கைங்கர்யங்கள், பராமரிப்புக்காக என்றே நிறுவப்பட்ட வெகு சில மடங்களில் இதுவும் ஒன்று எனும் பெருமை ஸ்ரீபெரும்பூதூர் யதிராஜ ஜீயர் மடத்தைச் சாரும். எம்பெருமானும் எம்பெருமானாரும் இம்மடத்துக்கு ஆண்டு முழுதும் பல முறைகள் எழுந்தருளுகின்றார்கள்.
ஸ்ரீபெரும்பூதூர் யதிராஜ ஜீயர் மடத்து முதல் யதிராஜ ஜீயர்
ஜீயர் ஸ்வாமிக்கான தனியனிலிருந்து இவருக்கு மாமுனிகளோடும் பொன்னடிக்கால் ஜீயர், கோயில் கந்தாடை அண்ணன், தொட்டாசார்யர் போன்றோருடனுமிருந்த அத்புதமான நெருக்கம் தெரிகிறது. இவரது வாழித் திருநாமத்திலிருந்து அவர் எம்பெருமானார் பால் பூண்டிருந்த பெருங்காதல் புலனாகிறது.
அழகர் திருமாலிருஞ்சோலை மடம் புனரமைத்துச் சீர் செய்ய அழகர் பரமஸ்வாமி திரு ஆணைப்படி மாமுனிகள் இவரைத் திருமாலிருஞ்சோலைக்கு அனுப்பியதாக ஒரு தகவல் உண்டு; இவர் அவரல்லர், திருமாலிருஞ்சோலை ஜீயர் பிறிதொருவர் என்பாருமுளர். இவ்விஷயம் கற்றோர் வாய்க் கேட்டறிந்து கொள்க.
இப்படிப்பட்ட ஸ்வாமியின் வைபவத்தில் ஒரு சில துளிகளை இங்கு அனுபவித்துள்ளோம். பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யம் நமக்குக் கிட்ட ஸ்ரீபெரும்பூதூர் ஆதி யதிராஜ ஜீயர் க்ருபையை வேண்டிப் பெறுவோமாக.
இவர் தனியன்:
ஸ்ரீமத் ராமாநுஜாங்க்ரி ப்ரவண வரமுநே: பாதுகம் ஜாதப்ருங்கம்
ஸ்ரீமத் வாநாத்ரி ராமாநுஜ கணகுரு ஸத்வைபவ ஸ்தோத்ர தீக்ஷம்
வாதூல ஸ்ரீநிவாஸார்ய சரணசரணம் தத் க்ருபா லப்த பாஷ்யம்
வந்தே ப்ராஜ்ஞம் யதீந்த்ரம் வரவரதகுரோ: ப்ராப்த பக்தாம்ருதார்த்தம்
அடியேன் சடகோப ராமானுஜ தாஸன்
ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/10/27/sriperumbuthur-adhi-yathiraja-jiyar-english/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org