ச்ருத ப்ரகாசிகா பட்டர்

ஸ்ரீ:
ஸ்ரீமதே சடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:

திருநக்ஷத்ரம்: தெரியவில்லை

அவதார ஸ்தலம்: ஸ்ரீரங்கம்

ஆசார்யன்:  வேத வ்யாஸ பட்டர், நடாதூர் அம்மாள்

நூல்கள்: ச்ருத  ப்ரகாசிகை , ச்ருத ப்ரதீபிகை,  வேதார்த்த ஸங்கிரஹத்திற்கு வியாக்யானம் (தாத்பர்ய தீபிகை) , சரணாகதி கத்யம் மற்றும்  ஸுபால உபநிஷத்திற்கு வ்யாக்யானம் , சுக பக்ஷீயம்

வேத வ்யாஸ பட்டருக்குப் திருப்பேரனாராக அவதரித்த இவர் ஸுதர்சன ஸூரி (ஸுதர்சன பட்டர்) என்று பெயர் சூட்டப்பெற்று நம்முடைய சம்பிரதாயத்தில் மிகப் பெரிய பண்டிதராக விளங்கினார். இவரே ஸ்ரீ பாஷ்யத்திற்கு ச்ருத ப்ரகாசிகை மற்றும்  ச்ருத ப்ரதீபிகை என்ற மிக முக்கியமான, மிக ஆழமான வ்யாக்யானங்களை எழுதியவர் ஆவார். நடாதூர் அம்மாள் வாயிலாக எம்பெருமானாரிடமிருந்து கேட்டறிந்த கொள்கைகளை அப்படியே விளக்கமாக அருளிச்செய்தார் என்று விளங்குமாறு அவைகளுக்கு அந்தப் பெயர்களை இட்டார்.

அம்மாளிடமிருந்து ஸ்ரீ பாஷ்யத்தைக் கற்றுக் கொள்வதற்காக பட்டர் காஞ்சிபுரம் சென்றார்.  பட்டருடைய அபரிமிதமான ஞானத்தையும் அறிவுக்கூர்மையையும் கண்டு வியந்த அம்மாள் , காலஷேபத்திதின் போது அவருடைய வருகைக்காகக் காத்திருந்து  அவர் வந்த பின் தான் அவர் தன்னுடைய காலஷேபத்தைத்  தொடங்குவார். ஆனால் அங்கிருந்த அம்மாளின் சில சிஷ்யர்கள்   பட்டருடைய உயந்த குடும்பப் பின்னணியினால் தான் அம்மாள் தங்கள் மேல் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று சொல்ல ஆரம்பித்தனர். அம்மாள் பட்டருடைய பெருமைகளை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்காக ஒரு நாள் தன்னுடைய காலஷேபத்தை நடுவில் நிறுத்திவிட்டு, தான் அன்று கூறிக்கொண்டிருந்த விஷயமாக முதல் நாள் தான் என்ன கூறினார் என்பதை விளக்கும்படி அங்கிருந்த எல்லோரையும் பார்த்துக் கேட்டார். மற்ற எல்லோரும் ஒன்றும் கூறாமல் மௌனமாய் இருக்க பட்டர் மட்டும் மிக அழகாக ஒவ்வொரு வார்த்தையையும் விளக்கினார். அதன் பிறகு தான் அம்மாளின் சிஷ்யர்கள் பட்டருடைய பெருமைகளைப் புரிந்து கொண்டனர்.

நம்பிள்ளை, பெரியவாச்சான் பிள்ளை போன்றோர் எப்படி திவ்ய ப்ரபந்தத்திற்கு வ்யாக்யானம் எழுதி அதன் மிக ஆழமான அர்த்த விசேஷங்களை நிலை நாட்டினார்களோ அதைப் போன்று பட்டரும் ஸ்ரீ பாஷ்யம், வேதார்த்த ஸங்கிரஹம் போன்றவைகளுக்கு வ்யாக்யானம் எழுதி ஸமஸ்க்ருத வேதாந்தத்தின்  ஆழமான  அர்த்த விசேஷங்களை நிலை நாட்டினார்.

இப்படியாக நாம் ச்ருத ப்ரகாசிகா பட்டருடைய பெருமைகளையும் அவருடைய வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவு அனுபவித்தோம். அவர் மிகப் பெரிய பண்டிதராகவும் நடாதூரம்மாளின் நெருங்கிய சிஷ்யராகவும் விளங்கினார்.

அவரைப் போன்று   நாமும் ஒரு சில துளியாவது  பாகவத நிஷ்டயைப் பெற வேணுமென்று அவருடைய திருவடித் தாமரைகளில் பிரார்த்திப்போம்.

ச்ருத  ப்ரகாசிகா பட்டருடைய தனியன்:

யதீந்த்ரக்ருத பாஷ்யார்த்தா யத் வ்யாக்யாநேந   தர்சிதா:
வரம் ஸுதர்சனார்யம் தம் வந்தே கூர குலாதிபம்

அடியேன் ஆண்டாள் ராமாநுஜ தாஸி

ஆதாரம்: http://acharyas.koyil.org/index.php/2013/04/16/srutha-prakasika-bhattar-english/

வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/

ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org