ஸ்ரீ:
ஸ்ரீமதே ஶடகோபாய நம:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீ வாநாசல மஹாமுநயே நம:
பூதம் ஸரஸ்ச மஹதாவ்ய பட்டநாத
ஸ்ரீ பக்திஸார குலஶேகர யோகிவாஹான்
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்த்ர மிச்ரான்
ஸ்ரீமத் பராங்குஶ முனிம் ப்ரணதோஸ்மி நித்யம்
பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், ஸ்ரீ ராமானுஜர், மதுரகவி ஆழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரின் திருவடிகளை நான் எப்பொழுதும் வணங்குகிறேன்.
மதுரகவி ஆழ்வார், ஆண்டாள், எம்பெருமானார்
இந்த திவ்யமான ச்லோகம் ஸ்ரீ பராஶர பட்டரால் அவர் திருக்கோஷ்டியூரில் நஞ்சீயருடன் வசித்து வந்த பொழுது அருளிச் செய்யப்பட்டது. வீர ஸுந்தர ப்ரஹ்ம ராயன் என்னும் ராஜாவால் ஏற்பட்ட தொந்தரவினால் அவர் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறினார். அக்காலத்தில் ஸ்ரீரங்கநாதனைப் பிரிந்த அளவில்லாத் துயரினால் இத்தனியனையும் திருப்பாவையின் தனியனையும் அருளிச்செய்து பகவத் பாகவத அனுபவத்தில் ஆழ்ந்தார்.
இந்த ஶ்லோகத்தில், பத்து ஆழ்வார்களை (பொய்கையார், பூதத்தார், பேயார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார்) அருளிச் செய்ததுடன், ஆண்டாளை “ஸ்ரீ” என்கிற பதத்தாலும், மதுரகவி ஆழ்வாரை “மிஶ்ர” (மெத்தப் படித்தவர்) என்கிற பதத்தாலும் ராமானுஜரை “யதீந்த்ரர்” என்கிற பதத்தாலும் அருளிச் செய்துள்ளார்.
ஆழ்வார்கள் வரிசை க்ரமத்தில்:
- பொய்கையாழ்வார்
- பூதத்தாழ்வார்
- பேயாழ்வார்
- திருமழிசை ஆழ்வார்
- மதுரகவி ஆழ்வார்
- நம்மாழ்வார்
- குலசேகராழ்வார்
- பெரியாழ்வார்
- ஆண்டாள்
- தொண்டரடிப்பொடி ஆழ்வார்
- திருப்பாணாழ்வார்
- திருமங்கை ஆழ்வார்
அடியேன் ஸாரதி ராமனுஜ தாஸன்
ஆதாரம் : https://acharyas.koyil.org/index.php/azhwars/
வலைத்தளம் – https://acharyas.koyil.org/index.php/
ப்ரமேயம் (குறிக்கோள்) – https://koyil.org
ப்ரமாணம் (க்ரந்தங்கள்) – http://granthams.koyil.org
ப்ரமாதா (ஆசார்யர்கள்) – https://acharyas.koyil.org
ஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – https://pillai.koyil.org